அதிகார மமதையில் உள்ள சர்வாதிகார அரசுக்கு தேவை உணர்ச்சியற்ற, சுய சிந்தனை இல்லாத
தொலை நோக்கு சிந்தனை இல்லாத, அடிமை மக்கள் தான் தேவை.
அதற்கு முதலில் மக்களின் மொழி உணர்ச்சியை அழிக்க முயல்வான்
அப்படி அந்த மொழி அழியும்போது அதன் இலக்கியம், பாரம்பரியம் அனைத்தும் காணமல் போய்விடும்.
அந்த மக்கள் முகவரியற்றவர்களாக ஆகிவிடுவார்கள்
உண்மையில் நம் நாட்டில் தேச பக்தி என்பது மொழி உணர்ச்சிதான்
நன்றாக ஆழ்ந்து, கூர்ந்து பார்த்தால் தெரியும்.
மொழி உணர்ச்சியை அழிப்பதன் மூலம் தேசபக்தியை அழிக்கிறோம் என்பது நன்றாக தெரிந்திருந்தும்
அந்த காரியத்தை சர்வாதிகார அரசு செய்யும்
அப்படி செய்யும் போது ஏதோ மிக பிரமாதமான பொது நன்மைக்கு வேண்டிதான் அப்படி செய்வதாக சொல்லுவான்
பாசாங்கு செய்வான், மொழி உணர்ச்சியின் காரணமாக தேச பக்தி அழிகிறது என்று
எவராவது உரிமை குரல் கொடுத்தால் அவர்கள் மிதிபடுவார்கள் அவர்களை காட்டுமிராண்டிகளாக சித்தரிப்பார்கள்
அப்படி மொழி உணர்ச்சி அழிக்கப்பட்டால் பாரத தேசத்தின் தேசபக்தி கேள்வி குறிதான்.
ஒருமை உணர்ச்சி என்பதை ஒரு சில விஷயங்களில் மட்டுமே வலியுறத்தவும், வற்புறத்தவும் முடியும்.
இயற்கை உணர்வுகளுக்கு புறம்பான விஷயங்களில் வற்புறத்த ஆரம்பித்தால்
விபரீதங்கள் மட்டுமே விளையும்.
It’s true