Skip to content
தேசபக்தி என்றால் என்ன?
தேசம் என்பது என்னவென்று தெரிந்தால் தான்
சரியான பக்தி செலுத்த முடியும்
சரி, இனி கேள்விக்கு வருவோம்
தேசம்னா என்ன
மண்பரப்பா? மரமா? கல்லா? தேசியக்கொடியா
இல்லை.
தேசபக்தின்னா மக்களின் நல்வாழ்வின் மீதும், உரிமைகள் மீதும்,
மொழி வழி கலாசாரங்கள் மீதும் கருத்து சொல்வதும்
அவற்றை பேணிக் காப்பதும் தான் தேசபக்தி.
மொழிகளில், கலாசாரத்தில் கைவைக்கும் ஏதேச்சதிகாரமான ஆசை,
துதி பாடுவது, ஏகாதிபத்திய அரசு எது செய்தாலும்
சரி என்று ஆனந்த கூத்தாடுவது, அல்ல தேசபக்தி.
இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால்
ஆட்சி பீடத்தின் அதிகார ஆணவ போக்கு புலப்படும்
கண்டிப்பாக அப்படிப்பட்ட ஆட்சி பீடத்தின்
சக்தியை குறைத்தால் மட்டுமே மக்களின் உரிமைகளும்
மொழிகளின் வளர்ச்சியும், கலா சாரமும் செழித்தோங்கும்,
இதை விட்டு,விட்டு மற்றபடி இருந்தால்
ஏகாதி பத்திய வெறியைர்களையும், கொடுங்கோலர்களையும் தான் உருவாக்கும்.
அப்படி உருவாக காரணமாக இருக்கும் தேசபக்திக்கு பெயர்
மூடத்தன மான தேச பக்தி.
இப்போதைக்கு
இவ்வளவுதான் சொல்லமுடியும்.
Go to Top