ஆனாலும், அதில் அவனுக்கு நிம்மதி கிடைக்காமல்
அடுத்த ஒப்பீடுகளுக்கு நகர்ந்து
தன் வாழ்க்கையை முழுமையாய் அனுபவிக்காமல் வாழ்ந்து மறைந்தும் விடுகிறான்.
இந்த நுண்ணிய வலைபின்னலில் இருந்து தப்பித்து
தனக்கு என்ன வேண்டும் என்பதை யோசித்து
எந்த அளவு வேண்டும் என்பதையும் தீர்மானித்து
தான் வேண்டியதை அடைவதற்க்கு உண்டான
தகுதியையும் வளர்த்து
தான் வேண்டியதை அடைந்து விட்டால் ஏற்படும்
திருப்தி என்றென்றும் நீடித்து நிலைத்து நிற்கும்
காரணம்
இங்கு யாரோடும் ஒப்பிடுதல் இல்லை.