நாம் வளர்வதும் நல்லபடியாய் இருப்பதும்
ஒரு தனிமனிதன் கையில் இல்லை.
காலம் விளையாடும் இடம் இது
காலம் சில சமயம்
பெரிய குழுக்களை ,தேசத்தை, இனத்தை, உருமாற்றும்
இதையெல்லாம் தனி மனிதனால் தடுத்துக் கொண்டிருக்க முடியாது.
இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதா என்று கேட்டால்
ஆமாம் என்பதுதான் பதில்
உதவி செய்ய கூடாதா என்றால்
எது உதவி என்றே தெரியாத போது
உதவி எப்படி செய்வது
உதவி இதுதான் என்று தெரிவதற்கே ஜென்மம் போதாதே,
ஏனென்றால் நாம் கற்க வேண்டிய கல்வியை கற்கவில்லையே
பின் உதவி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு
என்ன பிரயோஜனம்
அதனால் வேடிக்கை பார்த்தலே உத்தமம்.