மனித சமுதாயம் வாழ வேண்டிய முறை,
உலகத்தை உள்ளபடி ரசி
உனக்கென்று உள்ளதை முழுமையாக அனுபவி
உன்னுடைய எந்த செயலும் பிறரை காயப்படுத்தாமல் வாழ்.
உன்னையே கவனி
உனக்குண்டானது தவிர மற்றதை ஒதுக்க எப்போதும் எச்சரிக்கையாய் இரு
ஆனந்தமாய் இரு
அப்படி நீ இருந்தால்
நீ ஆண்டவனை கூட நினைக்க வேண்டியது இல்லை
காரணம்
ஆண்டவன் உன்னை நினைத்துக்கொண்டிருப்பான்
இயற்கையிடம் பாடம் கேள்
அது சொல்லி தருவதை புரிந்து கொள்
சுதந்திரமானவனாய் இரு.