மனிதன் மூன்று பகுதிகளால் ஆனவன்.
1. உடல், 2. மனம், 3. ஆன்மா இது உபநிஷதங்களின் அடிப்படை கருத்து –
உபநிஷதங்கள் – மனித வாழ்வை ஆராய்கின்றன.
இதில் நான் யார், எனது மூலம் எது? எனது முடிவு எது?
இது போன்ற நிலையில் ஆராய்ச்சி தொடருகிறது.
அடுத்து,
உலகம் – இதன் தோற்றம், மனிதனுக்கும், உலகத்திற்க்கும் உள்ள உறவு போன்ற நிலையில் ஆராய்கிறது.
அடுத்து,
இது இரண்டுக்கும் மூலமாயும், ஆதாரமாயும் உள்ள சக்தியை
அதாவது இறைவனை, அறிய, அடைய பயணிக்கிறது.
உபநிஷதங்கள் வாழ்வை மெருகூட்டி இயற்கையுடன் எவ்வாறு இணைந்து, இயற்கையின் வளங்களை
ரசித்து அனுபவிக்க நமக்கு கற்று தருகிறது.
இயற்கையின் இயல்பான நிலையை அறிந்து
அதற்கு ஊருவிளைவிக்காமல் வாழ
மனிதன் பழக வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
நமஸ்காரம் அய்யா
இது பேராசையா
என்று தெரியவில்லை.
ஆனால்
இயற்கையை நேசிக்கும்
அறம் அனைவருக்கும்
சாத்தியமானால்.
இந்த உலகம் எவ்வளவு அழகாக
இருக்கும்.
அப்படி ஒரு அற்புதத்தை
காணும் பாக்கியம்
எத்தனை பேருக்கு கிடைக்குமோ.