அந்த மனிதருக்குப் பெரிய கனவு இருந்தது. ஆனால், அந்த மனிதர் ஒரு கட்டத்தில்
தன் கனவு நனவாகும் என்கிற நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிட்டார்.
தன் கனவை அடையத் தன்னிடம் போதுமான பலம் இல்லை என்று கருதினார்.
யாரிடமாவது உதவி கேட்க வேண்டும் என்றும் அவருக்குத் தோன்றியது.
முதலில் அந்த மனிதருக்கு நினைவுக்கு வந்தது வயதான அவருடைய அம்மா. அவரிடம் கேட்டுவிடுவது என்று முடிவெடுத்தார்.
அந்தக் கனவை நனவாக்குறதுக்கான பலம் என்கிட்ட இல்லைனு தோணுது. அதுக்கான சக்தியை எனக்குக் குடுங்களேன்.”
அம்மா சொன்னார். “உனக்கு உதவி செய்யறதுல எனக்கு சந்தோஷம்தான்.
ஆனா, அந்த அளவுக்கு சக்தி என்கிட்ட இப்போ இல்லை.
இருந்த எல்லாத்தையும் உன்கிட்ட ஏற்கெனவே குடுத்துட்டேனேப்பா…”
அந்த மனிதர் இதைக் கேட்டு துவண்டு போனார்.
ஆனால், கனவை நிறைவேற பலம் வேண்டுமே!
யாரிடமிருந்தாவது, எந்த வழியிலாவது பெற்றுத்தானே ஆக வேண்டும்?
ஒவ்வொருவரிடமாகக் கேட்டுப் பார்ப்பது என்று முடிவு செய்துகொண்டார்.
