ஒரு பாதையோரம் இருந்த குளத்துக்கு பக்கத்துல ஒருத்தன் சின்ன சின்ன கற்களை அடுக்கி வைத்து
ஒவ்வொரு கல்லா எடுத்து குளத்துல போட்டு கொண்டு இருந்தான்.
அந்த பாதையில போன எல்லாருக்கும் என்னடா இவன் இப்படி கல்லை ஒவ்வொன்ன போடுறானேன்னு சந்தேகம்
“ஏம்பா தம்பி உனக்கு வேற வேலை வெட்டி இல்லையா இப்படி கல்லை குளத்துல போடறியே? ” அப்படின்னு கேள்வி கேட்டு பார்த்தாங்க.
அவன் அவர்கள் இப்படி கேட்பதை கண்டுக்காம ஒன்னு ரெண்டு அப்படின்னு எண்ணிக்கிட்டே மீண்டும் கல்லை குளத்துல போட ஆரம்பித்தான்.
இவன் இப்படி குளத்துல கல்லை போடறதும் வழியில் போறவங்க கேள்வி கேட்பதும்
அவன் ஒன்னு ரெண்டுன்னு எண்ணுறதும் இதை எல்லாம் ரொம்ப நேரமா தூரத்தில் இருந்து பார்த்துகிட்டே இருந்து அவன்
” தம்பி நான் கேட்கிறேன்னு தப்பா நினைக்காதே இப்படி இவ்வளவு கல்லை வைச்சு குளத்துல ரொம்ப நேரமா போடுறியே
உனக்கு வேற வேலையே இல்லையா நீ தப்ப நினைக்கிலேன்னா ஏன் இப்படி பண்றேன்னு சொல்ல முடியுமா?”அப்படின்னு கேட்டான்.
ரொம்ப நேரமா பேசாம இருந்த அவன் சொன்னான்”இந்த உலகத்தில் யாரும் வெட்டின்னு செய்றது இல்லை
அவன் அவன் செய்ற வேலை பற்றி அவனுக்கு தெரியும்.
எனக்கு தெரிஞ்சு உலகத்திலே வெட்டி வேலை அப்படின்னு சொன்னா
அடுத்தவன் என்ன செய்றான் ஏன் செய்றான் அப்படின்னு ஆராய்ச்சி செய்றது கேள்வி கேட்கிறதே வேலையா இருக்கறவனை சொல்வேன்.
அப்படிப்பட்ட ஆட்கள் எதனை பேர் இங்கே இருக்காங்கன்னு எண்ணி பார்த்தேன்” அப்படின்னு சொன்னான் .
இவ்வளவு நேரமா இதை பார்த்த கேள்வி கேட்ட எல்லோரையும் வேலை வெட்டி இல்லாதவன் ஆக்கி விட்டு
அவன் பாட்டுக்கும் எழுந்திரித்து போனான்.
நீதி: அடுத்தவன் செய்றது எல்லாம் வெட்டி வேலை என்று நினைத்து
கேள்வி கேட்டு நேரத்தை வீணாக்குவதே மிக பெரும் வெட்டி வேலை.