நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை.
போகும்போது எதையும் எடுத்துக்கொண்டு போகப்போவதில்லை.
ஆகவே சிக்கனமாக இருக்காதீர்கள்.
செலவு செய்யவேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள்.
மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.
உங்களால் முடிந்த அளவு தான தர்மங்களை செய்யுங்கள்!
எதற்கும் கவலைப்படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் தடுத்து நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்.
நாம் இறந்தபிறகு நமது உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப்படாதீர்கள்.
அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுகளோ
அல்லது விமர்சனங்களோ உங்களுக்குத் தெரியப்போவதில்லை.
நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும்,
உங்கள் வாழ்க்கையோடு சேர்ந்து முடிவிற்கு வந்துவிடும்.
உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டு விடும்.
அப்போது நீங்கள் இருந்தால்தானே உங்களைக் கேட்பதற்கு! புரிகிறதா உங்களுக்கு!!!