உசர்ட்டாசனம் — உசர்ட் ஆசனம் என்றால் ஒட்டக ஆசனம் எனப்பெயர். மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டு கைகளால் பின்னால் இரு கணுக்கால்களையும் பிடித்துக்கொண்டு பிருஷ்ட பாகத்தை காலில் உட்கார்ந்து இருப்பதிலிருந்து கிளப்பி தலையைப் பின்னால் படத்தில் காட்டியபடி தொங்கப் போட வேண்டும். மூச்சை முடிந்த மட்டும் 4, 5 முறை வேகமாக இழுத்து விட வேண்டும். பின் காலில் உட்கார்ந்து கைகளை எடுக்க வேண்டும். ஒரு முறைக்கு 5 வினாடியாக 2 முதல் 4 முறை செய்ய வேண்டும். பலன்கள் — முதுகெலும்பு பலப்படும். மார்பு விரியும். சுவாசக் கருவிகள் நன்கு வேலை செய்யும். மூக்கடைப்பு, ஆஸ்துமா நீங்கும். மூச்சுத் திணறல், பலகீனம் ஒழியும். போலீஸ், மிலிட்டிரிக்கு வேலைக்குப் போகிறவர்கள் மார்பு அகலம் வேண்டும் என்றால் 15 நாள் இப்பயிற்சியைச் செய்தால் 2 முதல் 3 அங்குலம் மார்பு விரியும். ஆஸ்துமாவுக்கு மிக முக்கியமான ஆசனம். தரையில் கையை வைத்தே முதலில் பழக வேண்டும். பின் 15 நாள். ஒரு மாதம் சென்றபின் கால்களில் கைகளை வைத்துச் செய்யலாம். Category: யோகாBy admin@powerathmaSeptember 3, 2020Leave a commentTags: divine power athmaUSSERT ASANAMஉசர்ட்டாசனம் -- Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:கால அட்டவணைNextNext post:மகாமுத்ரா — MAHAMUDRARelated Postsசுந்தர யோக சிகிச்சை முறை 158November 30, 2025சுந்தர யோக சிகிச்சை முறை 157November 29, 2025சுந்தர யோக சிகிச்சை முறை 156November 28, 2025சுந்தர யோக சிகிச்சை முறை 155November 27, 2025சுந்தர யோக சிகிச்சை முறை 154November 26, 2025சுந்தர யோக சிகிச்சை முறை 153August 10, 2025