நாம் செய்த பாவத்திலிருந்து விடுபடுவோம்
கையில் கலப்பை பிடித்த உழவர்களின் குடிசைகளிலிருந்து
புதிய இந்தியா எழும்பட்டும். மீனவர்கள், சக்கிலியர்கள், தோட்டிகள்
ஆகியவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழுட்டும்.
பலசரக்குக் கடைகள், பலகாரக்கடைகளிலிருந்து புதிய இந்தியா தோன்றட்டும்.
தொழிற்சாலைகள், கடைவீதிகள், சந்தை ஆகியவற்றிலிருந்தெல்லாம் புதிய
இந்தியா எழுந்து வெளிவரட்டும். பாமர மக்களைப் புறக்கணித்து ஒதுக்கியது தான்
நமது நாடு செய்த பெரும் பாவம் என்று நான் கருதுகிறேன்.
நமது வீழ்ச்சிக்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்தியாவின் பாமர மக்களுக்குக் சிறந்த கல்வியையும் நல்ல உணவு வசதிகளையும்
கொடுத்து அவர்களை நன்றாகக் கவனிக்க வேண்டும். அந்தப் பாமரமக்கள் தான்
நம்முடைய கல்விக்கு வரியாகப் பணம் தருகிறார்கள். அவர்களே நமது கோயில்களையும்
கட்டுகிறாரகள். ஆனால் அவற்றுக்குப் பதிலாக அவர்களுக்குக் கிடைப்பதோ வெறும்
உதைகள் தான். நடைமுறையில் அவர்கள் நம் அடிமைகளாகவே இருக்கின்றனர்.
இந்தியாவை முன்னேற்றமடையச் செய்ய விரும்பினால் இந்தப் பாமரமக்களுக்காக
நாம் வேலை செய்தாக வேண்டும்.