நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு அஞ்ச வேண்டாம்
ஒரு நல்ல இலட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு
தைரியத்துடன் வீரனாக விளங்கு.
நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய்.
நீ வாழ்ந்து மறைந்ததற்கு உன் பின்னால் ஓர் அழியாத அறிகுறி எதையாவது விட்டுச் செல்
எனது அருமைக் குழந்தைகளே * முன்னேறிச் செல்லுங்கள்.
பரந்த இந்த உலகம் ஒளியை வேண்டுகிறது. அதை எதிர்பார்க்கிறது..
இந்தியா மட்டும் அத்தகைய ஒளியை பெற்றுருக்கிறது.
ஜால வித்தையிலே இந்தியா விளக்கை பெற்றிருக்கவில்லை.
போலித்தன்மையினாலும் அந்த விளக்கைப் பெற்றிருக்கவில்லை.
ஆனால் உண்மையான மதத்தின் தலை சிறந்த சமயப் போதனையாகவும்;
மிகவும் உயர்ந்த ஆன்மீக உண்மையாகவும் அந்த விளக்கை இந்தியா பெற்றிக்கிறது.
ஆகையால் தான் பலவிதமான இன்ப துன்பங்களிலும் கடவுள் இந்தியாவைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்.
இப்போது அதற்கு உரிய சரியான நேரம் வந்துவிட்டது.
எனது வீரக் குழந்தைகளே நீங்கள் மகத்தான பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள்
என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். சிறிய நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை.
ஆகாயத்தின் இடியோசைகளைக் கேட்டும் நீங்கள் அஞ்ச வேண்டாம். எழுந்து நின்று வேலை செய்யுங்கள்.