செம்மறி ஆடுகளாக வாழ்வதா *
ஒவ்வொரு நாட்டிலும் மேற்கொள்ளப்படும் வழி முறைகள்
ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன.
வலிமை படைத்த ஒரு சிலர் கட்டளை இடுகிறார்கள்.
அவற்றை எல்லாம் எஞ்சியுள்ள மக்கள் அனைவரும்
செம்மறி ஆடுகளைப் போல முடிந்த முடிவுகளாக ஏற்றுப் பின்பற்றி நடப்பார்கள்.
அவ்வளவுதான் விஷயம்.
உங்களுடைய பாராளுமன்றம், சட்டசபை வாக்களிப்பு முறை
உங்கள் பெரும்பான்மை மக்களுடைய இரகசிய வாக்களிப்பு முறை –
ஆகிய இவை அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன்.
எனது நன்பரே
இவை எல்லாம் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாகத்தான் நடைபெறுகின்றன
இப்போது இங்கு இருக்கிற கேள்வி இதுதான்
. இத்தகைய வலிமையைப் பெற்றவர்கள் இந்தியாவிலே யார் இருக்கிறார்கள்?
ஆன்மீகத்துறையில் மிகப் பெரும் வலிமை படைத்த
சமயச் சான்றேhர்களிடையே அவர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள்தாம் நமது சமுதாயத்தை முன்னின்று வழிநடத்துகின்றனர்.
தேவைப்படும் போது மீண்டும் அவர்களே
சமூகத்தின் விதிமுறைகளையும் பழக்கவழக்கங்களையும் மாற்றியமைக்கிறார்கள்.
அவர்கள் சொல்வதை நாம் அமைதியுடன் கேட்கிறோம்.
அவர்களின் கட்டளைகளைப் பின்பற்றி நடக்கவும் செய்கிறோம்.
நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு அஞ்ச வேண்டாம்*