அமரத்துவம் வாய்ந்த எனது அருமைக் குழந்தைகளே*
நமது நாடு என்னும் இந்தக் கப்பல்
நீண்ட நெடுங்காலமாகத் தனது நாகரீகத்தைக் ஏற்றி கொண்டு வந்திருக்கிறது.
தனது எண்ணற்ற அரும் பெரும் செல்வங்களால்
இந்த உலகம் முழுவதையும் மேலும்மேலும் வளமாக்கிக் கொண்டிருக்கிறது
. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது இந்தக் கப்பல்
வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க நமக்கு உதவி புரிந்து வந்திருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான மக்களை வாழ்க்கைக் கடலின்
துன்பமற்ற மறுகரைக்கு அழைத்துச் சென்றபடியே இருக்கிறது.
ஆனால்
இன்று அந்தக் கப்பலில் ஒர் ஓட்டை விழுந்து பழுதடைந்து போயிருக்கிறது.
இந்த நிலைக்கு உங்களுடைய தவறுகள் காரணம்.
அல்லது வேறு காரணங்களும் இருக்கலாம்.
அதைக் குறித்து நாம் அவ்வளவாகப் பொருட்படுத்த வேண்டியதில்லை.
நீங்கள் அதில் அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
இப்போது நீங்கள் செய்யப் போகும் காரியம் என்ன?
நீங்கள் ஒருவருடன் ஒருவர் சண்டை போட்டுக்கொண்டு இருக்கப் போகிறீர்களா?
அல்லது நீங்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் ஒற்றுமையாக இணைந்து
அந்தக் கப்பலைப் பழுது பார்க்க
உங்கள் திறமைகள் அனைத்தையும் பயன்படுத்தப் போகிறீர்களா?
வினாவை விவேகானந்தர் நேரடியாக நம்மிடம் தான் கேட்கிறார்
நாம் சொல்லும் பதிலை காட்டிலும்
அவர் நம்மிடம் செயலைத்தான் எதிர்பார்ப்பார்
நாம் இப்போது செய்துகொண்டு இருக்கும் செயலைக்கொண்டு
எந்த பதிலை சொன்னாலும் சரியாய் இருக்குமா
நாம் சொல்லும் பதிலை அவர் ஏற்றுக்கொள்வாரா
நம் செயல்கள் அவர் சிந்தனைக்கு முற்றிலும் மாறுபட்டு இருப்பதை
அவர் கண்டுகொண்டு இருக்கும் போது
நம் செயலுக்கு
காலத்தின் மீது நாம் பழியை போட்டால்
அவர் ஒத்துக்கொள்ள மாட்டார்