நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை,
கடவுளிடத்தில் நம்பிக்கை – இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும்.
உங்கள் முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும்
(தேவ தேவியர்களிடத்தும்) மேலும் அவ்வப்போது உங்களிடையே அன்னிய
நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும் நம்பிக்கை இருந்து,
ஆனாலும் உங்களிடத்தே நம்பிக்கை இல்லாவிட்டால் உங்களுக்கு
கதிமோட்சமில்லை. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்.
நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய்.
நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.