சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்குமே
இறைவனை வழிபடுவதற்கான நெறிகள் ஆகும்.
இவற்றுள் சரியை என்பது, உடலால் வழிபடுவது.
அதாவது திருக்கோயிலை வலம் வருவது, திருக்கோயிலுக்குப் பூ மாலைகொடுப்பது,
திருக்கோயிலில் துப்புரவுப் பணி செய்வது முதலியன உடலால் வழிபடுவது ஆகும்.
கிரியை என்பது வாயினால் வழிபடுவது.
அதாவது மந்திரங்களை ஓதுவது, திருமுறைகளை நாள்தவறாமல் பாராயணம் செய்வது,
சாத்திர தோத்திரக் கருத்துக்களைப் பிறர்க்கு எடுத்துரைப்பது
முதலியன வாயினால் செய்யும் வழிபாடு ஆகும்.
யோகம் என்பது மனத்தினால் வழிபடுவது.
அதாவது வழிபடு தெய்வத்தின் வடிவத்தை மனத்தில் வைத்து தியானிப்பது.
அந்தரியாக பூசை செய்வது,
மந்திரத்தை உள்ளத்தால் ஜபித்து ஜப மாலை கொண்டு எண்ணுவது முதலியன
மனத்தினால் செய்யும் வழிபாடு ஆகும்.
இம்மூவகை வழிபாடுகளையும் தவறாமல் செய்து வந்தால்,
இறைவன் நமக்கு ஞானத்தை உணர்த்துவான்.