Skip to content
ஒவ்வொரு நாட்டிற்கும் அதற்கென வழிவழிவந்த ஒரு இயல்பு உண்டு
அதை உறுதியாக பற்றி நின்றவாறு செயல்படுத்துவதே
அந்த நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும்.
இந்த விஷயத்தை சிந்தித்தால்
நம் நட்டின் வழிவழி வந்த இயல்பு என்ன என்பது விளங்கும்
அது விளங்கிவிட்டது என்றால் நாடு சுபிட்சம் அடைந்து விடும்.
உண்மையில் நாம் இப்போது நமது பண்பாட்டை மறந்து
இருக்கின்ற காலத்தில் இருக்கின்றோம். இது நீடித்தால்
பண்பாட்டை இழந்த காலத்தில் கலந்து நமக்கென எந்த அடையாளமும்
இல்லாத நிலைக்கு வந்து விடுவோம்.
அமெரிக்காவையும், ஜப்பானையும், லண்டனையும் பார்த்து
இந்தியாவை தொலைத்துவிடுவோம்
இப்போதாவது விழித்துக் கொள்வோம்
தற்போது உலகெங்கிலும் பேசப்படும் பிரச்சனையாக இருப்பது
சுற்றுப்புற சூழ்நிலை மாசு அடைதல் மக்கள் பெருக்கம் அதிகரிக்கிறது,
தொழிற்சாலைகள் பெருகுகிறது. ஆனால் இதற்கு தகுந்தாற்போல்
இயற்க்கைக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கும்
விஷயத்தை மட்டும் நாம் மறக்கிறோம், மறுக்கிறோம்.
நம் முன்னோர்கள் நட்டு வளர்த்த மரங்களை வெட்டி அழிப்பதன்றி
ஒரு செடியை கூட நட்டு வளர்க்க நம்மாள் முடிவதில்லை.
இனியும் இது தொடர்ந்தால் இயற்கை நம்மை மன்னிக்காது.
நம்மை நோக்கி இயற்கை போர் தொடுக்கும் நம்முடைய அறிவியல்
அப்போது நமக்கு உதவாது அப்போது நம்மாள் எதுவும் செய்யமுடியாது.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டபின் அறிவியல் பூர்வமான காரணங்களை
கண்டுபிடித்து புள்ளி விபரங்கள் சொல்வதால் என்ன பயன்
அனுபவிக்க நேர்ந்த கஷ்டத்திற்க்கும் அழிவுகளுக்கும் பரிகாரமாகாது.
Go to Top
கலிகாலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனரோ அவை எல்லாம் தற்போது நடைபெற்று க் கொண்டு இருக்கிறது