Skip to content
மதம் என்றால் என்ன?
வாழ வேண்டிய முறையை உள்ளடக்கியது மதம்.
வாழ வேண்டிய முறை என்ன?
நீயும், நானும் வேறல்ல.
நாமும் பிரபஞ்சமும் வேறல்ல
என்ற உண்மையை உணர்வது தான்
வாழ வேண்டிய முறை
இன்னும் சொல்லப் போனால்
ஒன்று பலவாகி பலது ஒன்றாவது இயக்க சூத்திரம்
அந்த இயக்க சூத்திரத்தை முழுவதும் உணர
உள்ள கருவியாய் அமைவது மதம்
நான் எனும் பேதம்,
நாம் எனும் போதமாய் மாற
உள்ள படி நிலைகளில்
முதல் படியாய் இருப்பது மதம்.
அந்த படியில் ஏறியே
நான் எனும் பேதத்தை
நாம் எனும் போதமாய் மாற்ற இயலும் .
உபநிஷதங்கள்
மூன்று விஷயங்களைப் பற்றி சிந்திக்கின்றன
நம்மையும் சிந்திக்க தூண்டு கின்றன.
அந்த மூன்று விஷயங்கள் —
1. நாமாகிய மனிதர்கள்.
2. நாம் காணும் இந்த உலகம்.
3. இவைகள் உண்டாவதற்கான அடிப்படை சக்தி
இதை இறைவன் என்றும் சொல்லலாம்.
இந்த மூன்று விஷயங்களையும் இதற்க்குள்ள தொடர்புகளையும்
உபநிஷதங்கள் ஆராய்கின்றன – சிந்திக்கின்றன.
உபநிஷதங்கள் சிந்திப்பதை
நாமும் சிந்திப்போம் –
நம்மையும் –
நாம் காணும் இந்த உலகையும்.
Go to Top