சிவ புராணம் படித்தால், சிவனே ஆதி இறைவன் என்பார்கள். விஷ்ணு புராணம் படித்தால் விஷ்ணுவே ஆதி இறைவன் என்பார்கள். இன்னும் வேறு புராணங்களில் இன்னும் வேறு இருக்கலாம். முதலில் ஹிந்துக் கடவுள்களை விமர்சிக்க தத்துவரீதியாக பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். கடவுளர்கள் பெயர் எல்லாமே காரண பெயர். சிவா என்றால் புனிதமானவன், தீயதை அழிப்பவன். விஷ்ணு என்றால் அனைத்திலும் இருப்பவன், கிருஷ்ணன் என்றால் வசீகரிக்க கூடியவன், விநாயகன் என்றால் அனைத்திற்கும் நாயகன். இராமன் என்றால் ஒளி மிக்கவன், இப்படி ஒவ்வொரு பெயர்களும் ஒரு தன்மையைதான் குறிக்கிறதே தவிர, தனித் தனி கடவுள்களை அல்ல. நீங்கள் பொறுத்தி பார்த்தால்,இறைவனுக்கு இந்த அனைத்து பெயர்களும் பொருந்தும் அல்லவா ? கீதையில் கிருஷ்ணனும் “யாரை வழிபட்டாலும் அது என்னையே சேர்கிறது”. என்று சொல்கிறார். இங்கே கிருஷ்ணன் யார் ? புல்லாங்குழல் ஊதிக்கொண்டு, பசுவிற்கு பக்கத்தில் நிற்பவன் மட்டும் அல்ல அவன்.பரமாத்மா எனும் அனைத்திலும் வியாபித்து இருக்கும் இறைவன். அவனை சிவனின் உருவத்திலும் நினைக்கலாம், முருகனின் உருவத்திலும் நினைக்கலாம். இன்னும் சொல்லப்போனால் இறைவன் நம் எண்ணிக்கைகளுக்கு அடங்க மாட்டான். ஒருமை, பண்மைகளுக்கு அப்பாற்பட்டவன் இறைவன். அறிவுக்கு புலப்படாத இறைவனை, ஒன்று, இரண்டு, நூறு என்று நம்மால் எண்ணி தீர்க்க முடியாது. நீங்கள் ஒன்று என்று நினைத்தால் ஒருவனாய் காட்சி தருவான். பல என்று சொன்னால் பல தெய்வங்களாக காட்சி தருவான். இல்லை என்று நினைத்தால் இல்லாமல் இருப்பான். புராணங்கள் எனப்படும் தெய்வீக கதைகள், சாமான்ய மனிதர்களுக்கு இறைவனின் பல்வேறு தன்மைகளை குறித்த பல்வேறு விஷயங்களை விவரித்து, அதன்மேல் ஒரு லயிப்பு ஏற்படும் வகையில் சுவாரஸ்யமாக சொல்கின்றன. இறைவனின் ஒவ்வொரு தன்மையும், ஒவ்வொரு விதமான உருவங்களில் சித்தரிக்கப்படுகிறது. இறைவனுக்கு எண்ணிலடங்கா குணங்கள் அல்லது தன்மைகள் இருக்கின்றன, ஆகவே எண்ணிலடங்காத உருவங்களில் அவனை வழிபடுகிறார்கள். Category: பல்சுவை கதம்பம்By admin@powerathmaOctober 2, 2020Leave a commentTags: divine power athmaஇந்துகடவுள் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:எதையும் மகிழ்ச்சிகரமான கணங்களாக மாற்றிக் கொள்வதுNextNext post:குஞ்சிதபாதம்Related Postsவாழ்க்கை சுவையானது.November 30, 2024அதிசய காந்த கண்ணாடிAugust 10, 2024இரும்புக் குதிரைகள்August 9, 2024காந்தளூர் சாலை போர் 4August 8, 2024காந்தளூர் சாலை போர் 3August 7, 2024காந்தளூர் சாலை போர் 2August 6, 2024