சிந்தனையின் தொண்ணுாறு சதவிகித ஆற்றல் சாதாரண மனிதனால்வீணாக்கப்படுகிறது.
எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்துகொண்டே இருக்கிறான்.
சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ மனமோஒரு போதும் தவறு செய்வதில்லை.
நல்ல எண்ணங்களை கருவிகளாகக் கைக்கொள் *
நல்ல எண்ணங்கள், தீய எண்ணங்கள் ஆகியவற்றில் ஒவ்வொன்றும் தனித்தனியே வலிமைமிக்க ஆற்றலைப் பெற்றிருக்கிறது.
இந்த பிரபஞ்சம் முழுவதிலும் அவை நிறைந்திருக்கின்றன.
அவற்றின் அதிர்வுகள் தொடர்ந்து இருந்து வருவதானால்,
அந்தஎண்ணங்கள், செயலுக்கு வரும் வரையில் அவை கருத்து வடிவில் இருக்கின்றன.
உதாரணமாக, மனிதனின் கையிலுள்ள ஆற்றல்,
அவன் ஓர் அடி அடிக்கும் வரையிலும்,
அவன் அந்த ஆற்றலுக்குச் செயல் வடிவு தரும் வரையிலும் மறைந்திருக்கிறது.
நாம் நல்ல, தீய எண்ணங்களின் உரிமையாளர்களாக இருக்கிறோம்.
நாம் நம்மைத் துாய்மைப்படுத்தி நல்ல எண்ணங்களின் கருவிகளாக்கிக் கொண்டால்,
அவை நம்முள் நுழைகின்றன.
நல்ல ஆன்மா தீய எண்ணங்களை எளிதில்ஏற்பதில்லை.