ஆரோக்கிய வாழ்க்கை என்பது நோயற்ற நிலையில் உடல் இருப்பது மட்டும்அல்ல,
நன்கு உழைக்க வேண்டும். எந்த வேலை செய்தாலும் மன மகிழ்ச்சியோடும், உணர்வோடும் செய்தாலே
உடல் ஆரோக்கியத்திற்கு இருப்பதற்கு அடையாளம்
நல்ல உடற்கட்டு உள்ளவர்கள் கூட வேலை செய்ய மனமில்லாதவர்களாயும்,
சுறுசுறுப்பு இல்லாமலும் திரிவதை காண்கிறோம்
அவர்கள் உடல் ஆரோக்கியமானது அல்ல.
உழைப்பிலே ஊக்கம் உடையவராய் இருப்பதுதான் ஆரோக்கியத்தின் அறிகுறி,
அதுதான் ஆரோக்கிய வாழ்வின் அறிகுறி.
நோய் என்பது காலங்கடந்து நடைபெறும் வெளிதள்ளும் இயக்கமே ஆகும்.
பசி எடுக்கும் போது மட்டுமே உண்ணவேண்டும் என்ற பழக்கத்தை உறுதியாய் கடைபிடித்தால்
உடம்பில் நோய் ஏற்படும் வாய்ப்புகள் மிக, மிக குறைவு.
நமது தவறான உணவு முறைகளையும், பிற பழக்க வழக்கங்களையும், திருத்திக் கொள்ள வேண்டும்
எனும் உணர்வே நம்மிடம் இல்லாதிருக்குமானால்
அந்த உணர்வை நம்மிடம் தோற்றுவிப்பதற்க்காக வருவதே நோய்.