தனி ஒருவருக்கு உணவில்லையென்றல் ஜகத்தினை அழிப்பது பாரதியின் ஆன்மீகம்,
அடங்கமறு, அத்துமீறு புரட்சி செய் இது ஒரு கூட்டாரின் ஆன்மீகம்,
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்பது ஏசு பிரான் ஆன்மீகம்
ஏழைகள் சிரிப்பினில் இறைவனை காண்பது பகுத்தறிவாளர்கள் ஆன்மீகம்.
எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்துவிட்டோம்
நீங்கள் உங்கள் குலதெய்வத்தை கும்பிட்டு கொள்ளுங்கள் என்பது மருத்துவர்கள் ஆன்மீகம்
கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது கண்ணனின் ஆன்மீகம்.