உபநிடதம் என்பது உண்மையை கண்டறிய செய்யப்படும் பயணம்
காரணம், காரியம், இவைகளுக்கு உண்டான தொடர்பு
அல்லது தொடர்பு இல்லாது போன்றவற்றை கண்டறிய ஆவல் கொண்டு செய்யப்படும் பயணம்.
இதில் அண்ட சாராசரம் முதல் அணு வரை அறிய முற்படுவதே இலக்கு
ஆனாலும்
பொதுவாய் சொல்வதென்றால் ஆத்மானுபவம் அறிவதே, பெறுவதே நோக்கம், இலக்கு என்றும் கூறலாம்.
அது மட்டுமல்ல இயற்கை, மனிதன், இவைகள் உண்டாவதற்க்கு காரணமான மூல சக்தி,
இந்த மூன்றுக்கும் உள்ள தொடர்பை, தொடர்பின் விகிதங்களை, அறிய சாதனமாய் இருப்பது உபநிடதங்கள்
இதை அறிந்து கொள்ளும் மனிதன் தன்னை அறிந்தவன் ஆகிறான்
தன்னை அறிந்தவன் தன் தலைவனையும் அறிந்தவன் ஆகிறான்.
தன் தலைவனை அறிந்தவன் எல்லாம் அறிந்தவன் ஆகிறான்.
இப்படி மனித வாழ்க்கையை பக்குவபடுத்தி
மனித வாழ்வை பூரணத்துவம் அடைய
உதவி செய்வதே
உபநிட தத்துவத்தின் நோக்கமாகும்.