ஜீவனில் உயிர் உண்டு
அஜீவனில் உயிர் இல்லை
இந்த உயிரானது ஜடபொருளுடன் இணையாத பொழுது
பூரண அறிவுடன் விளங்குகிறது.
நம்முடைய பூரண அறிவுக்கு தடையாய் இருப்பவை
புலன்களும், பொறிகளும் தான்.
அதிலிருந்து விடுதலை அடைந்து விட்டால்
பூரண அறிவு சித்திக்கும்
அதாவது
ஞானம் உண்டாகும்
லோகாதாய வாதிகள், பிரத்தியட்சத்தை மட்டுமே ஏற்கிறார்கள்.
யூகத்தை ஏற்பதில்லை
சமண வாதிகள்,
பிரத்தியட்சம், யூகம் இரண்டையும் ஏற்கிறார்கள்.
அனுபவ வாக்கை ஏற்பதில்லை.
அதனால்
இவர்கள் வேதங்களை ஏற்பதில்லை.