மனிதனின் தேடல்கள் பலவற்றில் நான் யார் என்ற தேடலும் அடக்கம்
அந்த தேடலின் விளைவாக தோன்றிய கருத்துக்களே தத்துவங்கள் எனப்படுகின்றன.
உலகின் எல்லா பாகங்களிலும் உள்ள மனிதர்களின் தேடு பொருளாகவே இந்த நான் யார் என்பது இருந்திருக்கிறது.
இந்தியாவில் இப்படி தேடியவர்களை
மகரிஷிகள், யோகிகள், சித்தர்கள் என்று சொல்லுவார்கள்
இவர்கள் நான் யார் என்பதுடன் இந்த உலகம், அதன் இயக்கம் இதையும் தாண்டி
இந்த பிரபஞ்சம் அதன் செயல்பாடுகள் அந்த செயல்பாட்டிற்க்குண்டான சக்தி எது, எப்படி,
அது அண்டம் முதல் அணுவரை பரவி, விரவி பணியாற்றுகிறது என்பதை
அவரவர் ஆய்வில் அறிந்து அனுபவித்து தொகுத்தது
உபநிடதங்களாகவும், மதங்களாகவும் தத்துவங்களாகவும் மக்களின் வாழ்கைக்கும்,
வாழுதலுக்குமான கருப்பொருளாகவும் அமைந்துள்ளன.