பெருவிரலை மடக்கி சுண்டுவிரலின் கடைசி ரேகையை
தொடுமாறு வைத்து மற்ற நான்கு விரல்களால் மூடிக்கொள்ள வேண்டும்.
இதுவே ஆதி முத்திரை எனப்படும்.
தாயின் கருவில் இருக்கும் குழந்தை இவ்வாறு
கைகளை மூடியபடி இம்முத்திரை போன்று இருப்பதால்
ஆதி முத்திரை என அழைக்கப்படுகின்றது.
பலன்கள்
1.கண், காது, பல் வலிகளை போக்கும்.
2.மனக் குழப்பம், அதிர்ச்சி, படபடப்பு ஆகியவற்றை சரிசெய்யும்.
3.தேவையற்ற கவலை பயம் ஆகியவற்றைப் போக்கும்.
4.சுவாசம் மூச்சுத்தினறல் ஆகியவற்றை சீர்படுத்தும்.
5.தீய எண்ணங்களை போக்கி மனதை சுத்தப்படுத்தும்.
இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.
வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது சிறப்பு.
வயதானவர்கள், ஆசனநிலையில் அமர முடியாதவர்கள்
நாற்காலியில் அமர்ந்து செய்யலாம்.
தொடர்ந்து 40 நிமிடம் செய்ய முடியவில்லை என்றால்
காலையில்20 நிமிடமும்
மாலையில்20 நிமிடமும்
செய்யலாம்.