ஒருவரின் ஜாதகப்படி ஆதிக்கம் செலுத்தி தன் மூலம் பலன்களை தர
தகுதி பெற்ற கிரகங்களின் நட்சத்திரங்களில் 2, 6, 10 – க்குரியவர்கள்
கோச்சார காலத்தில் வரும்போது சிறப்பு மிக்க பலன்களை பொருள்
வசதி, தன விர்ததி, ஆதாயம், காரிய ஜெயம் தொழில் வாய்ப்பு, பதவி,
புகழ், விருது, பாராட்டு சத்காரியங்கள் நடைமுறையில் வருவதைப்
பார்க்கலாம்..
வக்கிரம், நீச்சம், அஸ்தமம் பெற்ற கிரகங்கள், பாதகாதிபதியாக
உள்ள கிரகங்கள், 3, 4, 12 – ஆம் பாவாதிபதிகள் வரும்போது பல
பாதிப்பான பலன்களை பெறுவர்..
ஆதிக்கத்திற்கு உரிய பலன்களை தன் மூலம் தர தகுதி பெற்ற கிரகங்கள்
1, 2, 5, 6, 10 – க்குரியவர்களாக இருந்து விட்டால் அந்த ஜாதகர் மிக
உயர்ந்த ஜாதகராக இருப்பார். இந்த ஜாதகர் எப்போதும் நன்மையான
பலன்களையே பெறுவார்.
இந்த நிலையைப் பெற்றவர்கள் புண்ணியம் பெற்ற பிறவிகளே..