மன்னன் மூன்று அதிகாரிகளையும் அழைத்தான். அவர்கள் முன்னிலையில் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான்.
“இந்த மூவரையும் தனித்தனியாகப் பாதாளச் சிறையில் அடையுங்கள்.
அவரவருடைய சாக்குப் பைகளை அவரவரிடம் வைத்து விடுங்கள்.
சிறைத்தண்டனை இரண்டு வாரங்கள் தொடரும்.
அந்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் வழங்க வேண்டாம்.
அவர்கள் சேகரித்த காய் கனி கிழங்கு வகைகள்தான் அவர்களுக்கு உணவு.”
மூன்றாம் அதிகாரியால் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் உண்டு உயிர் வாழ முடியவில்லை.
ஐந்தே நாட்களில் அவர் பசி தாங்காமல் மாண்டுவிட்டார்.
இரண்டாமவரோ அழுகிய கனிகளையும் நல்ல கனிகளையும் கலந்து உண்டு
எப்படியோ இரண்டு வாரங்கள் உயிர் வாழ்ந்துவிட்டார்.
ஆனால், அவர் உடல்நலம் கெட்டுவிட்டது.
மன்னன் அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டான்.