இரண்டாமவர் கொஞ்சம் குறுக்கு வழியில் யோசித்தார்.
பையை யாரும் சோதிக்க மாட்டார்கள் என்று மன்னரே சொல்லிவிட்டார்.
சோதித்தாலும் மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள்.
மேலே நல்ல தரமான பொருட்களை வைத்துவிடலாம்.
கீழே அழுகிய பழங்கள், கொட்டைகள், என்று வைத்துவிட்டால்
யாருக்கு என்ன தெரியப் போகிறது? என்று எண்ணி
அப்படியே செய்த அந்த நபர், ஒரே நாளில் தன் பணியை முடித்துவிட்டார்.
மூன்றாம் அதிகாரி அந்த அளவிற்குக்கூடச் சிரமப்படவில்லை.
பைக்குள் என்ன இருக்கிறது என்பதை யார் பார்க்கப் போகிறார்கள்
என்ற நினைப்பில் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் போட்டு பையை நிரப்பி
அரண்மணையில் சேர்த்துவிட்டார்.
ஒரு நாழிகைப் பொழுதில் வேலையை முடித்துவிட்டுத்
தன் மாளிகைக்குச் சென்று சுகமாக உண்டு உறங்கிவிட்டார்.