இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள்.
மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்குக் களப்பயிற்சி தரப் போகிறேன்.
உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும்.
அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள்.
உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சாக்குகளை காய், கனி, கிழங்குகளால் நிரப்ப வேண்டும்.
அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும்.
நீங்கள் கொண்டு வரும் சாக்குகளை நாங்கள் யாரும் பரிசோதிக்க மாட்டோம்.
அதை அப்படியே ஒரு ஏழையிடம் கொடுத்து விடுவோம்.
அவன் அதை உண்டு உங்களை வாழ்த்த வேண்டும்.
இந்தப் பயிற்சி திட்டம் வெற்றி பெற்றால்,
மக்கள் நலப் பணியாளர்களை இந்தப் பணியில் அமர்த்தி
மக்களின் பசி போக்கலாம்.