அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து,
அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான்.
ஒரு அமைச்சருக்குச் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான்.
மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன.
அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன்.
“ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” என்று சிந்து பாடினார்கள்
அதிகாரிகள். செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக்கிறார்கள்.
இந்த மூவருமே ஊழல் பெருச்சாளிகளா அல்லது விதிவிலக்குகள் ஏதாவது இருக்கிறதா என்பதை
அறிய வேண்டும் என்று நினைத்தான் மன்னன்.
அவர்களை அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.