அர்த்த சிரசாசனம் கெட்டியான விரிப்பில மண்டியிட்டு உட்காரவும். விரல்களைச் சேர்த்து முக்கோணம் போல் விரிப்பின் மேல் அமர்த்தவும். உச்சந்தலையைத் தரையில்அமர்ததி, பிடரியில் விரல்கள் ஒட்டியவாறு குனிந்து அமரவும். பிருஷ்டபாகத்தைத் தூக்கி கால்களை அருகே இழுத்து முக்கோண வடிவமாக நிற்கவும். சாதாரண மூச்சு. கண் மூடியிருக்க வேண்டும். உடல் கனம் யாவும் கையால் தாங்கும்படியாக இருக்கவேண்டும். ஒருமுறைக்கு 1 முதல் 2 நிமிடம் வரை இருக்கலாம். பின் மெதுவாக ஆசனத்தைக் கலைக்க வேண்டும். 2 முதல் 5 முறை செய்யலாம். சிரசாசனம் செய்யும் முன் 15 நாட்கள் இவ்வாசனம் கண்டிப்பாய்ச் செய்ய வேண்டும். பலன்கள் — சிராசனத்தில் சொல்லப்பட்ட பலன்கள் 80 சதம் இதற்குக் கிடைக்கும். மிகப் பலகீனமானவர்கள், வயதானோர், மாணவர்கள், சிறுவர், பெண்கள் இவ்வாசனத்தை மட்டும் தினம் காலை, மாலை 3 நிமிடம் செய்தால் நல்ல ஆரோக்கியம், உடல் பலம், சுறுசுறுப்பு, ஞாபகசக்தி, உடல் தெம்பு, கண்பார்வை உண்டாகும். Category: யோகாBy admin@powerathmaSeptember 9, 2020Leave a commentTags: ARDHA SIRASASANAMdivine power athmaஅர்த்த சிரசாசனம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:சிந்தனை சாதனைNextNext post:சிரசாசனம் — SIRASASANAMRelated Postsசுந்தர யோக சிகிச்சை முறை 128November 25, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 127November 24, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 126November 23, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 125November 22, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 124November 21, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 123September 30, 2024