அர்த்தசர்வாங்க ஆசனம்
செய்முறை:
விரிப்பின் மேல் தரையில் படுத்து நேராக கால்களைச் சேர்த்து தொடைகள் நெருங்கியிருக்குபடி வைத்துக் கொண்டு முழங்கால்களை மடக்கி நிறுத்தவும். அச்சமயம் இரு கைகளையும் இரு புறமும் இடுப்புக்கு கீழ் விலாபுறத்தில் பிடித்து சுவாசத்தை வெளிவிடாது உடல் பளுவை தூக்கி புறங்கைகள், கழுத்து, பிடரி ஆகியவற்றின் மீது சுமத்த வேண்டும். இந்நிலையில் சுவாசம் மெதுவாக நடைபெற வேண்டும். 10 முதல் 25 விநாடிகள் செய்துவிட்டு இயல்பு நிலைக்கு வரவும். இரண்டு முறை செய்வது நலம்.
பலன்கள்:
இந்த அர்த்தசர்வாங்க ஆசனம், அடிவயிறு சம்பந்தப்பட்ட இரத்த நாளங்களிலிருந்து மாதாந்திர மாதவிடாய் சீராக செயல்பட வைக்கும். மாதவிடாயின் போது ஏற்படும் தளர்வுகளை சீர் செய்யும். இருதய பலவீனம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தலையனையின் உதவியால் செய்ய வேண்டும்.