1929 – ம் ஆண்டு முதல் 1933 வரையில் நீடித்த உலகப் பொருளாதார வீழ்ச்சி, உலகப் பொருளாதாரத்தின் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் 30 சதவீதம் அளவுக்குச் சரிவு ஏற்பட்டது. சுமார் 1 கோடியே 30 லட்சம் பேர் வேலையிழந்தனர். 1929 – ல் வீழ்ச்சியின் தொடக்கத்தில் 3 சதவீதம் ஆக இருந்த வேலையில்லா திண்டாட்டடம் 1933 – ல் 25 சதவீதம் ஆக உயர்ந்து விட்டது. 85, 000 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. லட்சக் கணக்கானோர் வருவாய் இல்லாததால் குடியிருந்த வீடுகளை விற்று விட்டு நடுத்தெருவுக்கு வந்தனர். அடமானம் வைக்கப்பட்ட வீடுகளில் 50 சதவீதம் மீட்க முடியாததால் மூழ்கிவிட்டன. இந்த வீழ்ச்சிக்கு முன்னால், 75 ஆண்டுகளில் 19 முறை இதே போலப் பொருளாதார வீழ்ச்சிகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றின் சராசரி ஆயுள் அதிகபட்சம் 2 ஆண்டுகள்தான். பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் தொழிலாளர்களின் ஊதியங்களிலும், பொருட்களின் விலைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தி சமநிலைக்குக் கொண்டுவந்துவிடும். தங்கக் கையிருப்புக்கு ஏற்பதான் கரன்சி நோட்டுகளை அச்சிட வேண்டும் என்பதால் தேவைக்கேற்ப செலவிட முடியாமல் நாடுகள் திணறின. அதனால் குழப்பமும், நடைமுறைச் சிக்கல்களும் ஏற்பட்டன. எனவே தங்கத்துக்குப் பதிலாக உலக வர்த்தகத்தில் அதிகம் புழங்கிய அமெரிக்காவின் டாலர் நோட்டை அடிப்படையாகக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது. இதனால் வியாபாரம் எளிமையானது. நடைமுறைச் சிக்கல்கள் தீர்ந்தன. ஒரு டாலருக்கு இத்தனை ரூபாய் அல்லது பவுண்டு என்று நிர்ணயித்துக் கொண்டுவிடுவதால் ஒருவித நிலைத்தன்மையுடன் பேரங்களைச் செய்து கொள்ள முடிந்தது. டாலருக்குக் கிடைத்த புது மரியாதையால் அமெரிக்காவைச் சேர்ந்த பெரும் தொழில் நிறுவனங்கள் முக்கியமான நாடுகளில் தங்களுடைய உற்பத்திப் பிரிவுகளைத் தொடங்கி, அந்ததந்த நாடுகளில் மலிவாகக் கிடைக்கும் மூலப்பொருட்களையும், குறைந்த கூலிக்குக் கிடைத்தத் தொழிலாளர்களையும் பயன்படுத்தி உற்பத்தி செய்து குவித்தது குறிப்பிடத்தக்கது. Category: பல்சுவை கதம்பம்By admin@powerathmaMarch 9, 2021Leave a commentTags: DIVINEPOWERAATHMAA.COMஅமெரிக்க டாலர்உலகப் பொருளாதாரம்கரன்சிபவுண்டுபொருளாதார வளர்ச்சி Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:ஸ்ரீ சங்கரரின் வேதாந்தமுர சு. 4NextNext post:குதபாத ஆசனம்Related Postsஉலக பூமி நாள் 3April 18, 2025உலக பூமி நாள் 2April 17, 2025உலக பூமி நாள் ” 1April 16, 2025புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா 8March 19, 2025புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா 7March 18, 2025புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா 6March 17, 2025