சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை, சிந்தையுள்ளே
மன்னியது, உன் திரு மந்திரம், சிந்துர வண்ணப்பெண்ணே,
முன்னிய நின்அடியாருடன் கூடி, முறைமுறையே
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.
செந்நிறம் கொண்ட சிந்தூரத்தின் வண்ண மேனியை கொண்ட
அம்பிகையின் பொற்பாதங்கள் என் சிரத்தின் மேல் இருக்க
என் மனதில் நிலை பெற்று இருப்பது அம்பிகையே
உன் திருமந்திரம்
உன்னையே தியானிக்கும் அடியார்களுடன் கூடி
முறைபடி நான் உன் ஆகம பத்ததியை பாராயணம் செய்கிறேன்.
