துணையும், தொழும் தெய்வமும் பெற்றதாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனிமலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங் குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.
தனக்கு துணை என்று சொல்லும் அபிராமி பட்டர்
சூட்சமாய் உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் அபிராமியே துணை என்றும் கூறுகிறார்.
தன்னை பெற்ற தாயும் வேதம் எனும் மரத்தின் கிளையும் கிளையின் நுனியில் உள்ள கொழுந்தும்
அம்மரத்தின் வேராகவும், அபிராமியே உள்ளாள் என்று சொல்கிறார்,
குளிர்ச்சியுடைய மலரம்புகளையும் கரும்பு வில்லையும் மெல்லிய பாசாங்குசத்தையும்
திருக்கரத்தில் ஏந்திய திரிபுர சுந்தரி அறிந்ததாக கூறுகிறார்.
