சக்தியின் வடிவங்கள் பல பல அதில் அவரவர்களுக்கு பிடித்த சக்தியில் தோய்ந்து அதனுள் மூழ்கி திளைத்து
அந்த அனுபவத்தையும் அந்த சக்தியின் நிலைகளையும் உலகுக்கு கொடுத்த புண்ணியர்கள் பலர்
அந்த பலரில் சுப்பிரமணி எனும் நாமம் பெற்றோரால் இடப்பட்டு
உலகிற்கு அபிராமி பட்டராய் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட
புண்ணியரை ஆட்கொண்ட சக்தி திருக்கடவூர் வாழ் அபிராமி அம்மையேயாகும்.
சக்தியின் பல வடிவங்களில் ஒன்றாகிய அபிராமியின் அருளால் ஆட்கொண்டு நமக்கு தந்ததே அபிராமி அந்தாதி.
தெய்வ அருள் பெற்ற அபிராமி பட்டர் தன் அனுபவங்களையும், சிந்தனைகளையும்
அபிராமியின் அழகையும் ஆற்றலையும் அழகு தமிழில் நமக்கு நல்கதி இப்பிறவியில் கிட்ட வேண்டும் என்ற நோக்கோடு
மரணத்தின் வாசலில் அரசரால் இடப்பட்ட தண்டனையில் இருந்த நிலையில் உருவானதே அபிராமி அந்தாதி.
மரணத்தின் விளிம்பில் நிற்கும் போது கூட
அபிராமியின் மேல் அவர் கொண்ட பக்தியும், நம்பிக்கையுமே நமக்கு அபிராமி அந்தாதி கிடைக்க காரணமாயிற்று,
அதனால் அவருக்கு தண்டனை விதித்த அரசனை நாம் விடுவோம்.
சக்தி தனது லீலைகளில் தன்னை வெளிப்படுத்த அரசனை கருவியாக கொண்டது
அபிராமியின் திருவுள்ளம் என்பது தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியது
இனி அதைப்பற்றி யோசிக்காமல் அபிராமி பட்டருடன் அம்பிகையுடன் பயணம் செய்வோம்
நம்மாள் தனியே அம்பிகையுடன் பயணம் செய்ய முடியாது
காரணம் தூய பக்தியும் ஆழ்ந்த நம்பிக்கையும் தெளிந்த நெஞ்சுறுதியும் கொண்டோரால் மட்டுமே பிரயாணிக்க முடியும்
அப்படிபட்டவர்களின் துணையிருந்தால் மட்டுமே அவர்கள் கண்டதில் அனுபவித்ததில்
ஒரு சதவிதத்தையேனும் நாம் பெற முடியும்
அதனால் அபிராமி பட்டரின் நல்லாசி பெற்று
அவருடன் அபிராமியை நோக்கி அவரின் அந்தாதி மூலமாக பயணிப்போம்.
