ஆள்காட்டி விரலை மடித்து உள்ளங்கையில் வைக்க வேண்டும்.
பின்பு நடுவிரல் நுனியும் மோதிரவிரல் நுனியும் பெருவிரல் நுனியை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
சுண்டுவிரல் நீண்டிருக்க வேண்டும்.
பலன்கள்:-
1.நரம்பு சம்மந்தமான நோய்கள் குணமாகும்.
2.மன அழுத்தம் மன இருக்கம் போன்ற பிரச்சனைகள் தீரும்.
3.மலச்சிக்கல் தீரும், சிறுநீர்ப் பிரச்சனை தீரும்.
4.தலைவலி மற்றும் கழுத்துவலி குணமாகும்.
5.இதயம் சம்மந்தமான நோய்களை குணமாக்கும் இதயத் துடிப்பை சீராக்கும்.
6.இரத்தஅழுத்தத்தைக் குறைக்கும்.
7.லோ பிரசர் (குறை இரத்த அழுத்தம்) இருப்பவர்கள் செய்ய வேண்டாம்.
8.இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் ஒரு ஆறு மாதம் வறை செய்யய வேண்டாம்.
இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.
வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது சிறப்பு.
வயதானவர்கள், ஆசனநிலையில் அமர முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம்.
தொடர்ந்து 40 நிமிடம் செய்ய முடியவில்லை என்றால்
காலையில்20 நிமிடமும்
மாலையில்20 நிமிடமும் செய்யலாம்.