தூது சகுனம் ….. ரோகியின் குணங்கள் தெரியக்காட்டி வைத்தியரிடத்தில் சென்று வைத்தியரை அழைக்க வருந்தூதனது லக்ஷணங்கள் மருத்துவர்கள் அநுசரித்து சாத்தியா சாத்தியங்கள் அறிந்து ரோகியினிடத்திற்கு ஏகுகிறதற்கு லக்ஷணங்களை பூர்வருஷி சிரேஷ்டர்களால் சொல்லியதை இவ்விடத்தில் விவரத்து எழுதுகிறேன்.
ஏழு தினத்தில் மரணமடையும் தூத லக்ஷணம் ….. எந்த அழைக்கப்போகிறவன் கையில் மதுரமான பண்டங்களைக் கொண்டு வைத்தியனை அழைக்க ஏகுவானாகில், அந்த ரோகி ஏழு தினங்களில் மரணமடைவானென்று அறியவேண்டியது.
நாலு நாழிகையில் மரணகுறி தூத லக்ஷணம் …… ஒரு தூதன் வைத்தியன் சமீபம் சென்று அடிக்கடி சம்பாஷிப்பானாகில் நாலு நாழிகையில் மரணமடைவானென்று அறியவேண்டியது.