நாலாவது விதம் …… சிரத்தில் வியர்வைஉண்டாகிக் கொண்டு வாயிநிடமாகத்தானே மூச்சு விட்டுக்கொண்டு இருப்பதால் எட்டு நாடிகள் பலஹீனப்பட்டு சீதளமடைதலினால் அந்த ரோகி சீவிக்க மாட்டான் ( உயிரோடு இருக்கமாட்டான் ).
ஐந்தாவது விதம் ….. மரணமடையும் ரோகிக்கு நாக்கு, மூக்குநுனி, இரண்டு புருவங்கள் தாலுதேசம் இவைகள் தென்படாது
இவைகளுக்கு அருந்தததி என்றும் துருவம் என்றும் விட்சு திரிபாதி மாத்ரு மண்டலமென்றும் வேறு நாமதேயங்கள் ஆரியர்கள் வைத்திருக்கிறார்கள்.
ஆறாவது விதம் ….. மனதானது பிரமித்தால் அவர்களது வார்த்தைகள் பிதற்றவாய் முடியும் எப்படி எனில், இந்திரவில்லை வெறும் ஆகாயம் தான் என்றும் சொல்லுவான்.