வாதாதி சர பேதங்கள் சிலேஷ்ம தேஹிக்கு கம்பீரமாக சரம்,
பித்தேஹிக்கி சீக்கிர சவரம் வாததேகிக்கு சமசரம்,
பித்ததில் துரிதகதி, சிலேஷ்மத்தில் ஸ்திரகதி,
வாதத்தில் மந்தகதி சேஷ்டை உண்டாகி இருக்கும்.
வாதாதி பிரகிருதி தேஹ லக்ஷணம் பித்த ரோகி தேகம் உஷ்ணமாயும், வாதரோகத்தால் சீதலமாயும்
சிலேஷ்ம ரோகியின் தேகம் சலமயமாயும் இருக்கும் இவைகளைத்தான் தேகத்தின் சேஷ்டைகள் என்று சொல்லப்படுகின்றது.
ரோகமானது சாத்தியமென்று, அசாத்தியமென்றும் இரண்டு விதமாயிருக்கிறது
கால சம்பிராப்தியால் சகலமும் நிஷ்பலமாகி ஜீவியின் இருப்பு மரணமானது நிச்சயமாகின்றது
காலஞானமில்லாததினால் சகலமும் நிஷ்பலமாகி காலப்பிராப்தியால்
இந்திரியங்கள் விகாரமடைந்து மரணம் சம்பவிக்கின்றது.