இடகலை நாடி .; நாசிகையின் இடது பாரிசமாக ( வழி ) வரும் காற்றை இடகலை என்றும், சந்திரனென்றும்,
பித்துரியானமென்றும் பதினாறுகலைகளை உடையதென்றும் சொல்லப்படுகின்றது.
இனி சுழிமுனையென்னும் நாடியை குறித்து இது வைத்திய சாஸ்திரமாதலால் சொல்லவேண்டிய அவசியம் கிடையாது.
ஓ பார்வதி, சர லக்ஷணங்கள் முதலியது சர சாஸ்திரத்தில் புகட்டி இருக்கிறேன்
இது வைத்திய கிரந்தம் ஆதலால் அவ்விஷயங்களை விவரமாய் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது
சரம் பலதென்று தெரியக் காட்டினேன்
இனி அதுகளின் மாறுதலால் உண்டாகும் குறிகளை மாத்திரம் சொல்லுகிறேன் கேட்பாயாக.