ஆத்தும நிலை
சுருதி யுக்தி அனுபவம் என்னும் மூவிதங்களினால்,
சரீரம் ஆத்மாவென்றும்,
மனது அந்தராத்மாவென்றும்,
பிராணன் பரமாத்துமா என்றும்,
இதுதான் பஞ்சத்துவங்களை தாரணை செய்து இருக்கிறதென்றும் தெரியவருகிறது.
ஆகையால் ஆத்மாவுக்கும், மனதுக்கும் விகுருமமுண்டாகில்
தடை இன்றி மனிதன் இந்தலோகத்தில் சீவிக்கமாட்டான்.
காலமென்கிறவனால் பார்க்கப்பட்டான்.
அதாவது அந்த சீவிக்கி காலபிராப்தி ஆய்விட்டது என்று ( முடிந்து ) அறியவும்.