பிர்மாவுக்கு கல்பகாலம் பிராப்தமாகிற்து.
காலத்தை தவிர வேறுவித தெய்வங்கள் கிடையாது.
அயன் மால் ருத்திரன் என்கிற மூன்று உருவமே காலத்தின்
உண்டாக்கல், ரக்ஷித்தல், சம்மரித்தல் என்ற தொழில்களுக்கு
நாமங்களாம் (பெயர்கள்). (சத மாயுர்பவ) நூறு வருடங்கள்
மனிதர்களின் ஆயுட் நாட்களென்று வேதங்கள் முறையிடுகின்றது.
வேதவாக்கியத்தின் பிரகாரம் சீவிக்காமல் சுவல்பகாலத்தில் அதாவது
இளந்தை பருவத்தில் கௌமார பருவத்தில் யவ்வன பருவத்தில்
வார்த்தீக திசையில் அல்லது பிரக்கச்சே தானே மரணம் அடைவதற்கு
காரணம் அவர்கள் செய்யும் பாவகர்மங்களேயாம்.