கால ஞானம்
இந்த கால ஞானத்தை முதலில் சதாசிவரானவர் தனது பிராண நாயகியாகிய
உமா தேவியாருக்கும் உபதேசிக்கும் போது அந்த தேவியார் காலவசத்தினால்
தூங்கிவிட்டாள். அப்போது ஒரு கிளியும், மீனும் கேட்டுக் கொண்டு அம்மையாருக்கு
பதிலாக கிளியானது குரல் கொடுத்துக் கொண்டிருந்தது. சிவனார் கால ஞானத்தை
முழுதும் உபதேசித்து பார்வதியை நோக்கினார், பார்வதி தேவியார் தூங்குவதை
தெரிந்து எழுப்பி ஓ பிராண நாயகீ நீ தூங்கிக் கொண்டிருந்தாயே எனக்கு குரல்
கொடுத்துக் கொண்டிருந்தது யாரென்று கேட்டார் அதற்கு சிவகாமி எனக்கு
தெரியாதென்று சொல்ல தனது ஞான திருஷ்டியால் கிளி குரல் கொடுத்துக்
கொண்டிருந்ததென்று தெரிந்து அதனை சுகபிரமமாக செய்துவிட்டார்,
மச்சத்தை மச்சமுனியாக ( மீன் ) செய்துவிட்டார். அந்த கால ஞானத்தில்
வைத்தியருக்குறிய சில விஷயங்களை மாத்திரம் எழுதியிருக்கிறேன் மேல்
கூறிய எட்டு வித பரீக்ஷகளை விட இந்த பரீக்ஷயான மிகவும் மேலானது என்றும்,
யாவரும் லேசாய் தெரிந்துக் கொள்ள தக்கது என்றும் அறியவும்.