நாடிகளின் குணங்கள் …..
காதுகளில் வியாபித்திருக்கும் நாடிகள் ஓசையை அறியும்படியானவை,
கண்களில் வியாபித்திருக்கும் நாடிகள் ரூபத்தை அறியும்படியானவை,
மூக்குகளில் இருக்கும்படியான நாடிகள் வாசனையை அறியும்படியானவை,
நாவில் வியாபித்திருக்கும் நாடிகள் ரசத்தை அறியும்படியானவை,
சர்மத்தில் வியாபித்திருக்கும் நாடிகள் ஸ்பரிசத்தை அறியும்படியானவை,
இருதயம் முகம் இந்த இடங்களில் வியாபித்திருக்கும் நாடிகள் பேசுதற்கு உபயோகமானவைகள்.
மனது புத்தி இவை இரண்டும் இருதய ஸ்தானத்திலிருக்கின்றன.
புரீத்தி என்னும் நாடியில் மனது லீனமானால் மனிதனுக்கு தூக்கம் உண்டாகும்.
மேற்கூறிய பதினான்கு நாடிகளின் நாமங்கள் அல்லாது இன்னும்
அனேக நாடிகளின் பேர்கள் சாரதா என்கிற கிரந்தத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.
காந்தாரி ஹஸ்திஜிஹ்வா, பூஷா, அலம்புசா, யசஸ்வினி, சங்கினி, குஹ§
என்கிற ஏழு நாடிகளில் உத்பத்தி ஸ்திதி அதன் ரூபமாம்
முதலியவை யோகார்ணவ சாஸ்திரத்தில் விவரமாய் எழுதியிருக்கிறது.