நேத்திர பரீக்ஷ
திரிதோஷ நேத்திரம் …..
திரிதோஷத்தில் மூன்று தோஷ குறிகள் ஒன்றாயும் மேகவர்ணமாயும்
புகனநேத்திரமாயும் இருக்கும்.
திரிதின மரண நேத்திர லக்ஷணம் …..
சந்நிபாத லக்ஷணங்களுடன் எந்த ரோகயின் ஒர நேத்திரமானது பயங்கர
ரூபத்துடன் கலந்து இருக்கிறதோ அந்த மனுஷன் மூன்று நாளையில் மரணமடைவான்.
மரண நேத்திரக் குறி …..
கண்கள் கறுப்பு நிறமாயும் சோதி ஹீனமாயும் கண் உள்ளாகியும் மந்த திருஷ்டியாயும்
எவனுக்கு இருக்குமோ அவனும் எமனை தரிசனம் பண்ணுவான்.
ஏக தின மரண தோஷ நேத்திர லக்ஷணம் ….. ஒரு கண்ணானது அசைவு அற்று பார்வையற்று
விகார வர்ணங்களுடன் இருக்குமாகின் அவன் சந்தேமின்றி ஒரு நாளைக்குள்ளாக மரணமடைவான்.