அசாத்திய தயிலபிந்து உருவம் …..
மூத்திரத்தில் விட்ட தயிலபிந்துவானது ஆமையைப் போலும்,
நகத்தடி கலப்பை, எருது, நரி, ஒட்டகம், பன்னி இவைகளின்
உருவம் போலும் தோணுமாகில் ரோகமானது
அசாத்தியமென்றும் அறிய வேண்டியது.
மரண கால தயிலபிந்து ரூபம் ……
ஆயுதங்கள், கத்தி, வில்லு, கேடயம், உலக்கை, சூலம், கதை
முதலிய உருவமாக தோணுமாகில் சந்தேகமின்றி அந்த ரோகி எமபுரத்திற்கேகுவான்.