ரசாதிக்ய மூத்திர குறி …..
மூத்திரமானது கரும்பு ரசத்தைப் போல் ஒத்து
நேத்திரமானது பிஞ்சர வன்னமாயும் இருந்தால்
சகாதிக்யத்தினால் உண்டானதென்று அறிந்து
வங்கணம் செய்விக்கவேண்டியது.
ஆமவாத ரோக குறி ……
மூத்திரம் மஞ்சள் வன்னமாயும் அதிகமாயும்
ஆனால் ஆமவாத ரோகம் என்று அறியவேண்டியது.
அதிகசுர குறி …..
சிகப்பாயும் சுவச்சமாயும் தூமிரவன்னமாயும் மூத்திரமிருந்தால்
அதிக சுரமென்று அறியவேண்டியது.