இதுவுமது …..
மூத்திரத்தை பார்க்கும்போது அடியில் ரத்தம்
கலந்து போல் தோணுமாகில் அதிசார ரோக மென்றும்,
நெய்பிந்துக்களைப் போல் இருக்குமாகில் ஜலோதர ரோகமென்றும்,
வசும்பைப் போல் வாசனையும், தயிரைப்போல் நீர் இறங்குமாகில்
ஆமவாதமென்றும், குங்கும நிறம் அல்லது மஞ்சள் நிறமூத்திரமும்
அதே வன்னமான மலமும் ஆகுமாகில் வாதசுர மென்றும் அறிய வேண்டியது.